பழனியில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக,
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சருமான சிதம்பரத்தின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு
பழனி திருஆவினன் குடியில் சிறப்பு பூஜைகள் மற்றும் சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
மேலும் பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வில் மேற்கு மண்டல தலைவர் வீரமணி தலைமையிலும் நகர தலைவர் முத்து விஜயன் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் துணை தலைவர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் ராமநாத கிருஷ்ணன்,மற்றும் நிகழ்வில் சிறுபான்மை பிரிவு தலைவர் ஹக்கிம், மாவட்ட ஊடகப்பிரிவு பாலதண்டபாணி,ராஜீவ் காந்தி சமூக அறக்கட்டளை மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி திவ்யா பாரதி, பாஸ்கரன், லோகநாதன், பாபு, மானூர் செல்வம், குழந்தை வேலு, செல்வம், மா.செல்வம், செல்வி, தமயந்தி உட்பட நகர,வட்டார பேரூர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.