அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாளை 17.09.2024 -சமூக நீதி நாளை முன்னிட்டு (நாளை அரசு விடுமுறை என்பதால்) 16.09.2024 இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் முன்னிலையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். உடன் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .சிவகுமார் (தலைமையகம்) இருந்தார்கள்.
சமூக நீதி நாள் உறுதி மொழி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன் சுயமரியாதை,ஆளுமைத் திறனும் பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய
செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன் மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்