திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று உலக ஓசோன் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஓசோன் O3 வடிவில் அமர்ந்தவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தலைமை ஆசிரியர் டி.ஆர். நம்பெருமாள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுப. தமிழ்நேசன் தலைமையில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பிறகு ஓசோன் படலம் என்பது பற்றிய விழிப்புணர்வு தகவல்களை தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கினார். மேலும் சுற்றுப்புற சூழ்நிலை காரணமாகவும், அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் நிலைகளை பட்டியலிட்டு பேசினார். ஓசோன் பாதுகாப்பு பற்றிய மாணவர்களின் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.