சி கே ராஜன் 9488471235
கடலூர் மாவட்ட செய்தியாளர்..
கடலூரில் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவர்களின் 107-வது பிறந்த நாளினை முன்னிட்டு மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில்
அவரது சிலைக்கு மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார். , மாநகர மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் பாதாமரைச்செல்வன்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் . மாநகராட்சி ஆணையாரளர் மரு.எஸ்.அனு ஆகியோர் அண்ணாரது திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் பிறந்தார். இளம் வயதிலேயே சமுதாயப் பணிகளில் நாட்டம் கொண்டிருந்தார். மேலும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, நாடு விடுதலை பெற அரும்பாடுபட்டவர்.
நாடு விடுதலை அடைந்த பின்னர். 1952-ஆம் ஆண்டு “தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி” என்ற ஒரு கட்சியை துவக்கினார். 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்,இவரது உழைப்பாளர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட 19 வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்ட எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் . 1954-ஆம் ஆண்டு முதல் 1957-ஆம் ஆண்டு வரை பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் அமைச்சராகப் பணிபுரிந்தவர். 1980 மற்றும் 1984-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றினார்.
ஏழை. எளிய மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தங்களது உரிமையைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் மிகவும் சமயோசிதமாகவும் அதே நேரம் தன் கருத்தை ஆணித்தரமாகவும் பேசுவதில் வல்லவராக திகழ்ந்தார்.
பெருமைக்கும், புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், அவர்கள் ஆற்றிய பணிகளை சிறப்பிக்கும் வகையில் அண்ணாரின் பிறந்த நாளினை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.