சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்படாத திமுக, பந்த் போராட்டம் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்..! சுயேட்சை எம்எல்ஏ நேரு..!
புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற அதிமுக சார்பில் இன்று நடைப்பெற்ற உண்ணாவிர போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து பேசிய சுயேட்சை எம்எல்ஏ நேரு,
புதுச்சேரியில் ஆட்சியாளர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் நலனில் அக்கறையில்லை…
புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடி உள்ளது;
லாபத்துடன் இயங்கக்கூடிய மின் துறையை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் என்ன?
மக்கள் ஆதரவு இல்லாததால் எதிர்க்கட்சியான திமுக, எந்த விதமான போராட்டங்களையும் முன்னெடுப்பதில்லை;
சட்டமன்ற கூட்டத்தில் வாய் திறக்காமல், வெளியே வந்த பிறகு ஒன்றிரண்டு அறிக்கைகளை விட்டு திமுக நாடகம் ஆடுகிறது;
எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய பெரிய மார்க்கெட்டை புதுப்பிக்க திமுக தடையாக இருந்தது ஏன்?
ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல், ரெஸ்டோ பார் விவகாரம், தனியார் மது தொழிற்சாலை என எந்த விவகாரத்திலும் சட்டமன்றத்தில் குரல் எழுப்பாத திமுக, ஆளுங்கட்சியினருடன் பொருளாதார ரீதியில் வைத்துள்ள உறவை மூடி மறைக்கவே பந்த் போராட்டம் அறிவித்துள்ளது;