புதுச்சேரி N.R – பா.ஜ.க கூட்டணி அரசு அறிவித்துள்ள ஏழை-எளிய அனைத்து தரப்பு மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்யவும்,மின் கட்டணத்திற்கு மானியம் வழங்கிடவும்,
மின்சாரத்துறையை தனியார் மயமாகுதலை கண்டித்தும்,இந்தியா கூட்டணி சார்பில் செப்டம்பர் 18-ம் தேதி புதுச்சேரி முழுவதும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பாக நடக்க இருக்கும் பந்த் நோட்டீஸ் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கடைகளுக்கு வழங்கி பந்துக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார்,
உடன் திமுக தொகுதி செயலாளர் சக்திவேல், விசிக தொகுதி செயலாளர் கன்னியப்பன், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், திமுக தொகுதி துணை செயலாளர் ராஜி மற்றும் நிசார், கிளை செயலாளர்கள் சந்துரு, அசோக், செல்வம், காலப்பன், விநாயகமூர்த்தி, இருதயராஜ், ராகேஷ், விசிக நிர்வாகிகள் மூர்த்தி, கற்பகம், உமா, திமுக கழக நிர்வாகிகள் மோரிஸ், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.