புதுச்சேரி லாஸ்பேட் “உழவர் சந்தையை சமூக ஆய்வு” செய்தபோது… புதுச்சேரியில் வாழும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மக்களுக்காக மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் விளையக்கூடிய விவசாய பொருட்களை உள்ளூர் மக்களுக்கு சந்தைப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தின் லாஸ்பேட் சட்டமன்றத் தொகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை அடிப்படை வசதி இன்றி மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
புதுச்சேரி வேளாண்துறை இயக்குனர் திரு. வசந்தகுமார் அவர்களை சந்தித்து புதுச்சேரியில் இயங்கி கொண்டிருக்க கூடிய உழவர் சந்தையை மேம்படுத்தவும் மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மற்றும் சந்தைப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு உழவர் சந்தையிலும் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விற்பனை செய்ய தனி இடம் ஒதுக்க வேண்டும் என புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில சமூக ஊடக தலைவர் ஶ்ரீ மகேஷ் ரெட்டி அவர்கள் தலைமையில் வளர்ச்சி அடைந்த பாரதம் மாநில அமைப்பாளர் திரு. ரௌத்திரம் சக்திவேல் அவர்கள் மற்றும் பாஜக முக்கிய பிரமுகர் திரு.SKR செல்வகுமார் இவர்கள் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது. மேலும் மாநில சமூக ஊடக இணை அமைப்பாளர் திரு.தயா மாநில பட்டியலினி பொதுச்செயலாளர் திரு. நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.கணேஷ் திரு.பத்மநாபன், திரு. வைரமுடி, தகவல் தொழில்நுட்பத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.சார்லஸ், சமூக ஊடக மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.கதிர்வேல் திரு. செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.