திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நாகையகவுண்டபட்டியை சேர்ந்த அஜய்(23) விபத்தின் காரணமாக உயிரிழந்தை தொடர்ந்து அவர் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதனை தொடர்ந்து அன்னாரது உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அவர்கள் ஆர்.எம்.காலனி மின்மயானத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி, நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.