ஜிடிஎன் கல்லூரியின் சுற்றுச் சூழல் கழகம் சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் 19.09.24 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் அரிமா. லயன் ரெத்தினம் அவர்களும் கல்லூரி இயக்குனர் முனைவர் துரை ரெத்தினம் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் தலைமை உரையாற்றினார். சுற்றுச்சூழல் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி. ரவிச்சந்திரன், கருத்தரங்க நோக்கம் மற்றும் சிறப்புகளை எடுத்துரைத்து,விழாவில் கலந்து கொண்டவர்களை வரவேற்று பேசினார்.
அடுத்ததாக இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கருத்தரங்க சிறப்பு விருந்தினர் முனைவர் குணசேகரன், திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்கள் ஓசோன் படலத்தின் சிறப்புகள், ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட காரணங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதனை தடுப்பதற்க்கான வழிமுறைகள், அமில மழை பற்றியும், தற்கால பருவ நிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகள், தீர்வுகள் பற்றியும் மாணவர்கள் பயன் பெரும் வகையில் சிறப்பாக உரை நிகழ்த்தினார். அடுத்ததாக முனைவர் காதர் மொய்தீன் பாட்ஷா, மரம் நடுதலின் சிறப்புகளையும் அதன் தேவைகளையும், மீண்டும் மஞ்சப்பை குறித்த பயன்பாட்டு முறைகள் பற்றியும், மாணவர்களிடம் இயற்கை காக்க வேண்டி உறுதிமொழியும் எடுத்து சிறப்பாக பேசினார். இந்த கருத்தரங்க நிகழ்வில் சுமார் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் மற்றுமொரு சிறப்பாக மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை விநியோகம் செய்யப்பட்டது, மாணவர்கள் அனைவரும் கையில் மஞ்சப்பை ஏந்தி நெகிழியை ஒழிப்போம் என்ற முழக்கத்தோடு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வின் இறுதியில் சுற்றுச் சூழல் கழக துணை ஒருங்கிணைப்பாளர் அருண் நன்றி தெரிவித்தார்.