புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உட்பட 8 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ராஜபாளையம் வட்டக் கிளை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளை துணைத் தலைவர் மணிகண்ட பிரபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ராஜகுரு, சத்துணவு சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி, அரசு ஊழியர் சங்க கிளைச் செயலாளர் கருமலை உள்பட பலர் பேசினார்கள் முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் முத்து வெள்ளையப்பன் நிறைவுறை ஆற்றினார். முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.