பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறாக பேசிய அமைச்சர் எம் எல் ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெட்டப்பாக்கம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தர்வீந்தர் சிங் மார்வா ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவார் என்று கூறியதாகவும் அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி சிண்டே சேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் கெய்வாட் ராகுல் காந்தியின் நாக்கை அறுபவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத் பிட்டு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இந்த நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதி என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசியிருக்கிறார்

இதே போல் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரகுராஜ் சிங் என்ற அமைச்சர் ராகுல் காந்தியை நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதி என்று பேசியிருக்கிறார் இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர்

நாட்டின் பொது அமைதிக்கும் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக மேற்படியாளர்களின் பேச்சுக்கள் அமைந்து மக்கள் மத்தியில் ராகுல் காந்தியின் செல்வாக்கை கலங்கப்படுத்துவதாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்

ஆகவே மேற்படியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக புகார் மனு கொடுத்து வருகின்றனர்

அந்த அடிப்படையில் இன்று நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மை நாதன் பிரகாசம் ரெட்டியார் சேகர் ரெட்டியார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *