பன்னாட்டு ரோட்டரி மாவட்டம் 3000த்தின் – உள்ள
ரோட்டரி கிளப் ஆப் மதுரை எலைட்
ரோட்டரி கிளப் ஆப் மதுரை சென்ட்ரல்
ரோட்டரி கிளப் ஆப் மதுரை மீனாட்சி
ரோட்டரி கிளப் ஆப் மதுரை கிளாசிக்
சங்கங்கள் இணைந்து கல்வி செம்மல் மற்றும் தேச கட்டமைப்பாளர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 20 வருடத்திற்கு மேலாக கல்வி சேவை செய்து வரும் அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது ரோட்டரி மாவட்டம் – 3000 த்தின் ஆளுநர் ரோட்டேரியன்
ராஜா கோவிந்தசாமி , விருதுகளை வழங்கினார்.
இவ்விழாவில் 13 பேருக்கு கல்விச்செம்மல் விருதுகளும்
4 பேருக்கு தேச கட்டமைப்பாளர் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
” அறம் இதுவே என்றவர் ஆசிரியரே “என்ற தலைப்பில் ஆசிரியர் தின விழாவின் ஒரு பகுதியாக விருதுகள் மிகச் சிறந்த முறையில் வழங்கப்பட்டது.
ரோட்டரி கிளப் ஆப் மதுரை எலைட் சங்கத் தலைவர்
ரோட்டேரியன் ஜூலியன் பிரகாஷ்,ரோட்டரி கிளப் மதுரை சென்ட்ரல் தலைவர் ஹரிஹரன்,ரோட்டரி கிளப் ஆப் மதுரை மீனாட்சி தலைவர் ரோட்டேரியன்
தாஸ் குமார்,ரோட்டரி கிளப் ஆப் மதுரை கிளாசிக் தலைவர்ரோட்டேரியன் செந்தில்குமார்,மற்றும்
ரோட்டரி கிளப் ஆப் மதுரை எலைட் சங்க செயலாளர்
ரோட்டேரியன் ராமராஜன்,ரோட்டரி கிளப் ஆப் மதுரை சென்ட்ரல் செயலாளர்
ரோட்டேரியன் Dr.பிரபு,ரோட்டரி கிளப் ஆப் மதுரை மீனாட்சி செயலாளர் ரோட்டேரியன் பாஷா,
ரோட்டரி கிளப் ஆப் மதுரை கிளாசிக் செயலாளர்
ரோட்டேரியன் செல்வகுமார், ஆகியோர்
விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் ரோட்டேரியன் Dr.ராஜா கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார்.
ரோட்டேரியன் தாஸ் குமார் வரவேற்று பேசினார்.
ரோட்டேரியன் ஜூலியன் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்.ரோட்டேரியன் ஹரிஹரன்
அறிமுக உரையாற்றினார்.ரோட்டேரியன் செந்தில்குமார் நன்றி கூறினார்.