பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பிரதான வீதியில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எல் எம் முகமது அஷ்ரப் தலைமை வகித்தார். கூத்தாநல்லூர் நகரக் கழக செயலாளர் ஆர் ராஜசேகர் வரவேற்று பேசினார். மாவட்ட கழக பொருளாளர் ஏ என் ஆர் பன்னீர்செல்வம் திருவாரூர் நகரக் கழக செயலாளர் ஆர் டி மூர்த்தி கூத்தாநல்லூர் நகரக் கழக அவைத் தலைவர் குமார் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கழக செயலாளர்கள் திருவாரூர் தெற்கு பி கே யூ மணிகண்டன் வடக்கு ஜி எஸ் செந்தில் வேல் கொரடாச்சேரி வடக்கு எஸ் வி சேகர் தெற்கு டிவி பாஸ்கர் கோட்டூர் ராஜா சேட்டு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா காமராஜ் எம் எல் ஏ கழக அமைப்பு செயலாளரும் மன்னார்குடி முன்னாள் நகர மன்ற தலைவருமான சிவா ராஜமாணிக்கம் தலைமை கழக பேச்சாளர்கள் தீப்பொறி முருகேசன் அரங்க சத்தியமூர்த்தி ஏ.ஜெ. ஏங்கல்ஸ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா காமராஜ் எம் எல் ஏ பேசும்போது பேசியதாவது தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கால் படாத இடம் எதும் இல்லை உலக நாடுகளுக்கு சென்று சிறப்பாக உரையாற்றிய பெருமை பேரறிஞர் அண்ணா விற்கு உண்டு பெரியார் அண்ணா புரட்சித்தலைவர் எம் ஜி.ஆர் , புரட்சி தலைவி அம்மா அதன் வழியில் வந்தவர் எந்த இடத்தில் ஆங்கிலத்தை பேச வேண்டுமே அந்த இடத்தில் ஆங்கிலத்தில் பேசும் வல்லமை படைத்தவர் அறிஞர் அண்ணா சென்னையை தமிழ்நாடு என பெயர் மாற்றிய பெருமை அண்ணாவிற்கு உண்டு இந்த சமுதாயத்தை தூக்கிய நிறுத்திய இயக்கம் அதிமுக பசி பட்டினியை போக்கிய இயக்கம் அண்ணா திமுக தான். விலைவாசி உயர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை பால் விலை உயர்வு மின்கட்டனம் உயர்வு திமுக ஆட்சியில் என்ன செய்து கொண்டிருக்கிறார் திமுக அரசின் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின்கட்டணம் உயர்வு 2026 மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் 2026ல் எடப்பாடியர் முதல்வர் ஆவார் என்பது நிச்சயம் அண்ணா திமுக ஆட்சியின் காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் பண புழக்கத்தில் இருந்தார்கள் ஆனால் திமுக ஆட்சியில் பணம் இல்லை பணம் இல்லை என புலம்புகிறார்கள் அதிமுக இயகத்திற்கு தேய்மானமே என்பது கிடையாது, அப்படி பட்ட தலைவன் உருவாக்கியது தான் அதிமுக 2026 ல் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை அமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று அப்போது புரட்சி தலைவர் எம்ஜிஆர்
புரட்சி தலைவி அம்மா புரட்சித் தமிழர் எடப்பாடியார் கொண்டு வந்த அனைத்தும் திட்டங்களும் மீண்டும் கொண்டு வருவோம் என என்றார். மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தாநல்லூர் மன்னார்குடி கிழக்கு ஒன்றியம் திருவாரூர் நகரம் திருவாரூர் தெற்கு வடக்கு ஒன்றிய கழகம் கொரடாச்சேரி ஒன்றிய கழகம் உள்பட நகர ஒன்றிய கழக கிளைக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் சார்பு அணி செயலாளர்கள் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏராளமான பொதுமக்கள் பெண்கள் பங்கேற்றனர்
