தூத்துக்குடியில் ஐந்தாவது புத்தகத் திருவிழா வருகிற 3-ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது புத்தகத் திருவிழா சங்கரப்பேரியில் நடைபெறுகிறது புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார் அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோரிடம் புத்தகத் திருவிழா நடைபெறுவது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார் விழா மேடை அமைப்பது பொதுமக்கள் அமர்வதற்கான இருக்க வாகனங்கள் வந்து செல்வதற்கான இட வசதி உள்ளிட்டவைகளை கனிமொழி எம்பி கேட்டறிந்தார் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தாசில்தார் முரளிதரன் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தூத்துக்குடி டவுன் ஏ எஸ் பி மதன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்