தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொங்காரப்பட்டி ஊராட்சி கூடுதுறைப்பட்டியில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நாட்களாக அவதிக்குள்ளாகி வந்த நிலையில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று அண்ணா நகர் விநாயகர் கோயில் முதல் ஆனந்தூர் சாலை வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார் அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் மேலும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்,
இந்நிகழ்ச்சியில் அதிமுக கம்பைநல்லூர் நகர செயலாளர் தனபால்,வகுரப்பப்பட்டி முன்னாள் தலைவர் ராமஜெயம்,வார்டு கவுன்சிலர் சரவணன், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.