நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம்
அரக்கோணம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் J.ஜெயசீலன் அறிவுறுத்தலின்படி தூய்மை இந்தியா என்ற கருத்தை முன் வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அஞ்சலக ஊழியர்கள் மற்றும் நெமிலி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் இணைந்து இணைந்து நேற்று நெமிலி துணை அஞ்சலகத்தின் சார்பாக மிகப்பெரிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்விற்கு தலைமை தாங்கி நடத்தியவர் D.சரத் பாபு SPM மற்றும் நெமிலி அஞ்சலகம் ஊழியர்கள் மற்றும் நெமிலி சார்ந்த கிளை அஞ்சலக ஊழியர்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் எனது வீடு தெரு பள்ளி பொது இடங்கள் பூங்காக்கள் தோட்டங்கள் எனது கிராமம் மாவட்டம் மாநிலம் ஆகிய உள்ளும் புறமும் சுத்தமாகும் தூய்மையாகவும் வைத்துக் கொள்வேன் என்றும் குப்பைகளை அருகாமையில் உள்ள குப்பைத்தொட்டியில் மட்டுமே போடுவேன் எனவும் மகாத்மா காந்தியின் கனவான தூய்மை பாரதம் என்பதற்கு இதயபூர்வமாக என்னை அர்ப்பணித்து எனது செயல்பாடுகள் மூலம் அதனை நிறைவேற்ற அயராது பாடுபடும் என்றும் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் எஸ் லோகநாதன் (பொறுப்பு) இளநிலை உதவியாளர் வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றியும் எங்களோடு ஒத்துழைத்த துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணைத்து மரியாதை அளிக்கப்பட்டது.