அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கவுண்டர் மகாஜன சங்கத்தின் மகாசபை கூட்டம் அங்குள் தனியார் திருமண மண்டப வளாகத்தில் சங்கத் தலைவர் விஜயன் தலைமையில் நடந்தது. துணை தலைவர்கள் நல்லியப்பன், தயாளன், முன்னிலை வகித்தனர். செயலாளர் அழகப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், சக்திவேல், பொருளாளர் சிதம்பரநாதன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில்வரவு செலவு உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக 10ம் வகுப்பு, 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும் பணமும், கேடயமும் பரிசுகளாக வழங்கப்பட்டது. சங்கநிர்வாகிகளுக்கு கைத்தறி ஆடைகள் அணிவிக்கப்பட்டது.