விருதுநகர் மாவட்ட எஸ்பி.கண்ணன் உத்தரவின்பேரில் ராஜபாளையம் உட்கோட்ட காவல்துறை டிஎஸ்பி.பிரீத்தி தலைமையில் போலிசார் அனைத்து பகுதிகளிலும்.
அரசால் தடைசெய்யப்பட்ட.போதை பொருட்களை.தடுக்கும் விதமாக.அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் அஜித்குமார் தலைமையில் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது நான்கு முக்கில் நின்று கொண்டிருந்த இளைஞர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து 30 கிராம் கஞ்சாவை கைப்பற்றி முத்துலிங்கம் (20) கைது செய்தனர்.
இதே போல் தளவாய்புரம் காவல் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் பேருந்து நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கோயம்புத்தூரிலிருந்து தளவாய்புரம் வந்த பேருந்தில் இறங்கியவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 25 கிராம் கஞ்சாவை கைப்பற்றி செட்டியார்பட்டியை சேர்ந்த திலீப்குமார் (19) கைது செய்தனர். இதேபோல் சேத்தூர் பகுதியில் ரோந்து சென்ற எஸ்ஐ. லவகுசன். இனாம்கோவில்பட்டியை சேர்ந்த செல்லச்சாமி(60) என்பவரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை கைப்பற்றி .கைது செய்யப்பட்டார்