அரியலூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்
மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்,மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கி வளாகத்தில் நடைபெற்றது. அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் கு .சின்னப்பா நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். முகாமிற்கு மாவட்ட செயலாளர் க. இராம நாதன் தலைமை வகித்தார்.மாவட்ட மதிமுக இளைஞரணி துணை செயலாளர் சி. சேப்பெருமாள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும்வரவேற்றார்.
30க்கும்மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மதிமுக நிர்வாகிகள் முகாமில் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர் . அதனைதொடர்ந்து, இரத்ததான நிகழ்வில் குருதி கொடை அளித்தவர்களை பாராட்டி , அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் மாவட்ட மதிமுக சார்பில் மருத்துவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டன. இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்டதொண்டரணிஅமைப்பாளர் சசிகுமார்,மாநிலபொதுக்குழு உறுப்பினர் வி எஸ் கொளஞ்சி, ஒன்றிய செயலாளர்கள் கா.பி.சங்கர்,கவிஞர்.எழிலரசன்,பழனிச்சாமி அண்ணாதுரை, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப் பாளர்கள், உ. கார்த்திக் கேயன், சுந்தர், மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் இரா .இரா பார்த்த சாரதி, அரியலூர் நகர துணை செயலாளர் குமார் ,மாவட்ட பிரதிநிதி அறவாழி ,ரத்த வங்கி தலைமை மருத்துவர் மரு. சந்திர சேகரன், செவிலியர் தவமணி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். நிகழ்வின் முடிவில் அரியலூர் நகர மதிமுக செயலாளர் இராம மனோகரன் நன்றி கூறினார்.