பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வாசன் கண் மருத்துவமனையில் பாரதிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில துணை தலைவர் எஸ்.மணிவேல் முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வாசன் கண் மருத்துவமனை கண் மருத்துவர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.பாரதிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கேசவமூர்த்தி அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஏ.கே. செந்தில்குமார், மாவட்ட செயல் தலைவர் சிவம் செந்தில் குமார், மாவட்ட இணை செயலாளர் சி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் அமுதா கர்ணன், வாசன் கண் மருத்துவமனை பி.ஆர்.ஓ சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.