தகடூர் புத்தகப் பேரவையில் செயற்குழு கூட்டம் தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் இரா. சிசுபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் மரு.இரா.செந்தில் புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் இ.தங்கமணி நடைபெற்ற பணிகளை எடுத்துரைத்தார்.
பேரவையின் பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் கூத்தப்பாடி மா. பழனி, ஆர்.கே. கண்ணன், தமிழ் மகன்
ப. இளங்கோ, மாரி கருணாநிதி,எம். பூங்குன்றன்,மா. கோவிந்தசாமி, துரைராஜ் , கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
வருகிற அக்டோபர் நான்காம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தருமபுரியில் 6 வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் இப் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்.
புத்தகத் திருவிழா நாட்களில் தினசரி மாலை 5 மணி அளவில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஆளுமைகள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், இலக்கியச் சந்திப்பு, நூல்கள் வெளியீடு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளன.
இதனை ஒட்டி மாவட்டம் முழுவதும் பரப்புரை மேற்கொள்வது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.