தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்திலும் வாரந்தோறும் புதன்கிழமை ஒவ்வொரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது அதன்படி இன்று தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாகளித்தனர் குறைதீர்க்கும் நாள் முகாமில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது
இந்த நிலையில் சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி என்ற பெண் பிறப்பு சான்றிதழில் தவறுதலாக இருந்ததால் கடந்த ஏழு வருட காலமாக மாநகராட்சியில் தொடர்ந்து பல முறை மனு அளிக்கப்பட்டது
ஆனால் பிறப்பு சான்றிதழ் மாற்றி தரப்படவில்லை இந்த நிலையில் மேயர் வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் நான் மனு அளித்தேன் மனு அளித்த பின்பு இரண்டு தினங்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்தனர்
இதனை அடுத்து நான் மனு அளித்த மனுக்கு 72 மணி நேரத்தில் பிறப்பு சான்றிதழ் சரியாக வழங்கப்பட்டுள்ளது ஏழு வருடமாக அலைந்த எனது பிரச்சனைக்கு 72 மணி நேரத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் தீர்வு கண்டுள்ளார் என்று மாரீஸ்வரி கூறினார்
இந்த பொதுமக்கள் முகாமில் ஆணையர் மதுபாலன் மண்டல தலைவர் பாலகுருசாமி தெற்கு மண்டல உதவி ஆணையர் கல்யாண சுந்தரம் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்