தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், செப்- 26. தஞ்சாவூர் நேற்று காலை தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை மேயர் சண்.ராமநாதன் ஆய்வு செய்யும் போது உடன் சென்ற அலுவலர்களில் மாநகராட்சி பொறியாளர் ஆனந்தி செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது அவர்களை ஒருமையில் அழைத்த மேயர் சண்.ராமநதன் இங்கே வாம்மா யாரிடம் பேசிட்டு இருக்க என்று சொல்லி ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல் அவர்களின் செல்போனை பிடிங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிர்வாளர்களால் அதிக அளவில் வைரலாக பகிரப்பட்டது.

இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றம் எதிர்க்கட்சித் தலைவர் கே.மணிகண்டன் நான் கலந்து கொண்ட மாமன்றம் கூட்டங்களில் போது நடந்ததாகவும் அதை அப்போதே கண்டித்து வெளிநடப்பு செய்ததாகவும் கூறி, கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது.
நேற்று காலை தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை மேயர் சண்.ராமநாதன் ஆய்வு செய்யும் போது உடன் சென்ற அலுவலர்களில் மாநகராட்சி பொறியாளர் ஆனந்தி செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது அவர்களை ஒருமையில் அழைத்த மேயர் சண்.ராமநதன் இங்கே வாம்மா யாரிடம் பேசிட்டு இருக்க என்று சொல்லி ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல் அவர்களின் செல்போனை பிடிங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டுவிட்டு. பொது மக்களிடம் குறைகள் கேட்கும் போதும் நீ இங்கே நில்லுமா என்று சொல்லி அவர்களை ஒரு பெண்ணும் பாராமல் கீழ்த்தரமாக நடத்தியுள்ளார்.
இந்த செயல்பாடு அவர் ஒரு கடுமையாக செயல்படக்கூடிய மேயர் என்று மக்கள் மத்தியில் அவரின் மேல் ஒரு மதிப்பீடை உருவாக்குவதற்காக பொறியாளரை தரம் தாழ்ந்து மக்கள் மத்தியில் நடத்தியுள்ளார். இது போலத்தான் அவர் பேசுவார் என்று பலமுறை பல பேர் சொல்லி உள்ளனர். நான் பங்கேற்ற மாமன்ற கூட்டத்தில் அவர்கள், முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்களை ஒருமையில் பேசும் போது கூட அவரை கண்டித்து நாங்கள் வெளிநடப்புச் செய்தோம் மேலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் தொடர்ந்து அவரிடம் நீங்கள் உட்காரும் இருக்கைக்கு என்று ஒரு தனி மரியாதை உள்ளது அதை கண்ணியத்துடன் காப்பாற்ற வேண்டும். என பலமுறை நான் வலியுறுத்தியுள்ளேன்.
அந்த இருக்கைக்கு உள்ள மரியாதையுடன் பொதுமக்கள் மத்தியில் நடக்க வேண்டும் ஆனால் அவருக்கு அந்த இருக்கைக்குள்ள மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என்று இதுவரை தெரியாமல் தொடர்ந்து இதுபோலவே செயல்பட்டு வருகிறார். அவர் இன்றைக்கு ஒரு மாநகராட்சியின் பொறியாளரை ஒரு பெண் என்றும் பாராமல் எப்படி எல்லாம் அசிங்கப்படுத்தலாமோ அப்படி அசிங்கப்படுத்தி உள்ளார். தொடர்ந்து அவருடைய செயல்பாடுகளை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறோம் என்று அவரின் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மேயரின் செயல்பாடு குறித்து பகிரப்பட்ட வீடியோவை வலைதள பகிர்வாளர்கள் தொடர்ந்து அதிகமாக பகிர்வதும், இது குறித்து கடுமையான விமர்சனங்களையும் வைத்துக்கொண்டு வருகின்றனர்.