திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30 -ஆம் ஆண்டை முன்னிட்டு,த.மு.மு.க மற்றும் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் திரு இருதய ஆண்டவர் மருத்துவமனை, இருதய ஆண்டவர் செவிலியர் கல்லூரி சார்பில் இலவச இருதய, சிறுநீரகம், குழந்தை நலம், தோல் நோய்,பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாம் கோவிந்தகுடி பள்ளிவாசல் தாருல் உலூம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு த.மு.மு.க கிளை தலைவர் அகமது கபீர் தலைமை தாங்கினார்.முன்னதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரஹ்மத்து அலி அனைவரையும் வரவேற்று பேசினார். ஜமாத் தலைவர் உமர் பாட்சா முகாமை துவக்கி வைத்தார்.த.மு.மு.க தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் ஜிபாயத்துல்லா, செயலாளர் முகம்மது சலீம், கிளை நிர்வாகிகள் சபீர் முகம்மது, சாகுல் அமீது,முகமது இம்ரான் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இம் முகாமில் அம் மருத்துவமனை இயக்குனர் அருட்தந்தை தேவதாஸ் மற்றும் நிர்வாகிஆலிஸ் பிரான்சிஸ் கலந்து கொண்டு மருத்துவம் சார்ந்த சிறப்பு விழிப்புணர்வு உரையாற்றினார்.
முகாமில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆஷா வேலன் டைன் மற்றும் இஸ்ரேல் ஆகியோர் கொண்ட ஐவர் மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் தகுந்த சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.