கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திப்பனூர் ஏரி சுமார் 59 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வருடந்தோரும் பாரூர் ஏரியிலிருந்து காலவாய் மூலம் நீர் கிடைகப்பெறுவதால், ஏரி நிரம்பி சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரி நிரம்பினால் மதகு வழியாக பெனுகொண்டாபுரம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஏரியின் மதகு கதவுகள் உடைந்துள்ள காரணத்தால் தண்ணீரை சேமிக்க முடியாமல் ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேறிவிடும் என கடந்த 20 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு சென்றனர். எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால் தற்போது தண்ணீர் முழுவதும் வெளியேறி திப்பனூர் ஏரி வறண்டு காணப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
நீர் இருப்பு வைத்திருந்தால், அடுத்த 6 மாதங்களுக்கான நிலத்தடி நீர் விவசாயத்திற்கு பயன்பட்டிருக்க வேண்டிய நிலையில், தண்ணீர் கிடைக்கப்பெற்று 20 நாட்களுக்குள்ளாக அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் வரண்டு காணப்படுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை எ.இ. சீனிவாசன் அவர்களிடம் கேட்டபோது, மதகை மாற்ற அதிகாரிகளுக்கு கடிதம் வைத்துள்ளோம். உத்திரவு கிடைக்கப்பெற்றதும் புதிய மதகு அமைக்கப்படும் என தெரிவித்தார்.