நாமக்கல் மாவட்டத்தில் 243 மாணவ மாணவிகளுக்கு, ரூ. 14.33 கல்விக்கடன் உதவியை, பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்.பி. மாநிலங்களவை
உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், எர்ணாபுரம் தனியார் கல்லூரியில், மாணவ மாணவகளுக்கு கல்விக்கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு
கல்வி கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மேலும் பேங்குகள் மூலம் கல்வி கடனுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவித்திட தேசியமயமாக்கப்பட்ட பேங்குகள் மூலம் ரூ. 7.50 லட்சம் வரை ஜாமீன் இல்லாமல் கடனுதவியும், ரூ. 4 லட்சம் வரை வட்டியை அரசு மானியமாகவும் செலுத்துகிறது.
ரூ. 7.50 லட்சம் வரை ஜாமீன் இல்லாமல் கடனுதவியும், ரூ. 4 லட்சம் வரை வட்டியை அரசு மானியமாகவும் செலுத்துகிறது. ரூ. 7.50 லட்சத்திற்கு மேல் கடனுதவி தேவைப்படும் மேல் கடனுதவி தேவைப்படின் சொத்து ஜாமீன் பேரில் வழங்கப்படுகிறது. வெளிநாடு சென்று படிக்கவும் கடனுதவி வழங்கப்படுகிறது.
கல்வி கடன் பெறும் மாணவ, மாணவியர்கள் அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு, நன்கு படித்து வேலைவாய்ப்பு கல்லூரிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும். மேலும் வங்கியில் வாங்கிய கல்விக்கடனை, குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும். நீங்கள் திரும்பி செலுத்தும் கடன் மற்றொரு மாணவரின் கல்விக்கு நீங்கள் செய்திடும் உதவி ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 3,918 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 530 கோடி கல்வி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த ஜூன் 30ம் தேதி வரை, 945 மாணவ, கோடி கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்வேறு பேங்குகளின் சார்பில், மொத்தம் 234 பேருக்கு ரூ.14.33 கோடி கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என
இன்றைய தினம் பல்வேறு பேங்குகளின் சார்பில், மொத்தம் 234 பேருக்கு ரூ.14.33 கோடி கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.