திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரத்தில் 1,000 ஆண்டு பழமை வாய்ந்த சடையாண்டி கோயில் உள்ளது.
இங்கு எழுந்தருளி இருக்கும் சடையாண்டி சுவாமியை காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் செழிக்கவும், வேண்டுதல் நிறைவேறவும் சடையாண்டி சுவாமி கோயில் திருவிழா நடந்தது. தொடர்ந்து கோயிலுக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் பலியிடப்பட்டன.
பின்னர் 200 மூட்டை அரிசியில் கறி விருந்து சமைக்கப்பட்டது. நள்ளிரவு 12.30 மணிக்கு சடையாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின் விழாவில் பக்தர்களுக்கு விடிய, விடிய கறிவிருந்து பரிமாறப்பட்டது. இதில், அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.