சிறுபாக்கத்திலிருந்து ஆத்தூருக்கு கருப்பு நிற காரில் மான் வேட்டையாடி செல்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று சாமுவேல் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மூன்று நாட்டு துப்பாக்கி நான்கு கத்திகள் ஏழு நெற்றியில் கட்டும் லைட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இந்திய வன உரிமை பாதுகாப்பு சட்டம் 1972 படி கைது செய்யப்பட்டார்.

பறிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவி சிறுபாக்கம் புதிய காலணியை சேர்ந்த அஜித் என்பவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.பாரஸ்டர் சிவக்குமார் வனச்சரகர் நவதிவிதகிருஷ்ணன் மற்றும் அமுதப்பிரியன் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *