தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருகில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் தென்றல் தவழும் சுருளி அருவி சாரல் விழா நான்காம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்