இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்டக்கிளையின் சார்பில் 02.10.2024 புதன்கிழமை இன்று காலை 10:00 மணியளவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கூட்ட நிகழ்வு பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும்
மாவட்டச்செயலாளர் .ஆ.சண்முகம் வரவேற்றார்கள்.
இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தலைவர் .செ.ஜெயராமன் தலைமை தாங்கினார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் .வீரபத்திரன் மகன் .யோகநாதன் ஆசிரியர் செல்லமுத்து மகன் இராஜேந்திரன் முனுசாமி மகன் S.M.சந்திரசேகர் அபரஞ்சி மகன் இராஜேந்திர பிரசாத் வழக்கறிஞர் சிதம்பரம் பேரன் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் இந்திய சுதந்திரப் போராட்டக்கால தியாக நிகழ்வுகளையும், தன் இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் யுத்தத்தின்போது ஒரு ரெட்கிராஸ் தன்னார்வமிக்கத் தொண்டனாக சேவை புரிந்ததனை நினைவு கூறப்பட்டது.
இந்நிகழ்வில் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி
மாவட்ட கிளையின் சார்பில் துணைப்புரவலர்
சகானா து.காமராஜ் நியமன துணைத் தலைவர்
க.செல்வராஜ் வழக்கறிஞர் இணைச் செயலாளர் அசோக்குமார்
உறுப்பினர்கள் கனக லட்சுமி . அருள் ஜோதி சேகர் சுரேஷ் குமார் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டடன. பின்னர் மாவட்டப்பொருளாளர்
இ.எழில்அவர்கள் நன்றி கூற நிகழ்வு நிறைவுற்றது.