பெருந்தலைவர் காமராசரின் 49 – ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்துநிலையத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது,
இந்நிகழ்விற்கு பெரம்பலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பாலகுரு தலைமை வகித்தார்,மேலும் இந்நிகழ்வில் மகளிர் பாசறை பொறுப்பாளர் ஜான்சிராணி, செய்தித்தொடர்பாளர் சத்தியசீலன், தொகுதி பொறுப்பாளர்களான இளங்கோவன், ராஜேந்திரன்,சிவநேசன், வெங்கடேஷ்பிரபு, மற்றும் பாசறை பொறுப்பாளர்களான விஜய், கிருஷ்ணமூர்த்தி, சாமிதுரை, வெங்கடேஷ் உள்ளிட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.