காந்தி ஜெயந்தி விழாவில் மாவட்ட மருத்துவ இயக்குநருக்கு உத்தமர் காந்தி விருது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு சமூக ஆர்வலரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் பீர்முகம்மது தலைமை தாங்கினார்.
கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார். ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் டாக்டர் ஜெயமணி ஆறுமுகம் பங்கேற்று சிறப்புரை ஆற்றி, பல்வேறு சமூக சேவைகளை ஆற்றிய மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் அவர்களுக்கு உத்தமர் காந்தி விருதை வழங்கினார். மேலும் ‘காந்தியின் வாய்மையும், தூய்மையும்” என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்க தலைவர் பொன்.ஜுனக் குமார் கருத்துரைகள் வழங்கினார்.
நிகழ்வில் காந்தி வேடமணிந்து பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் ரோட்டரி கிளப் தலைவர் செல்வக்குமார், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், அருவி அறக்கட்டளை ரூபன், பூங்குயில் சிவக்குமார், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் கு. சதானந்தன், அ.ஷாகுல் அமீது, தலைமை ஆசிரியர்ள் க.வாசு, கோ.ஸ்ரீதர், நல்லாசிரியர் பழ. சீனிவாசன், தென்னக இரயில்வே மேலாளர் சு.தனசேகரன், கவிஞர் தமிழ்ராசா, ஹோமியோபதி டாக்டர் சரவணன், கற்க கசடற அமைப்பு நிர்வாகி இரா. பாஸ்கரன், நூலகர் தமீம், வழக்கறிஞர் குமார், வந்தை குமரன், கணினி ஆசிரியர் பா. சுரேஷ், கவிஞர் முகமது அப்துல்லா, வெற்றி அறிவொளி வெங்கடேசன் உள்ளிட்ட ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பலரும் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் உத்தமர் காந்தி விருது பெற்ற டாக்டர் எஸ். குமார் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. சட்டப் பணிக்குழு ஆலோசகர் எஸ். விஜயகுமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.