திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் கூவனூத்து அரசு துவக்கப்பள்ளியில் அக்-2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர்.முத்துலட்சுமி சத்யராஜ் தலைமையிலான கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற து.தலைவர்.சௌந்தர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை முக்கிய அலுவலகங்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள அனைத்து கிராமபுர பொதுமக்கள் முன்னிலையில் கடந்த 2023 முதல் 2024 வரையிலான தணிக்கை அறிக்கை பெறுதல், தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்தல், மக்கள் திட்டமிடல் இறக்கம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம்,ஜல் ஜீவன் இயக்கம் குறித்து ஓன்றிய கிராம புற பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கபட்டது.
இதில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக சிறப்பாகக் பணியாற்றி தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும் வகையில் புதிய சீருடை, பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. சுகாதரத்துறை துறையில் HIV மற்றும் பால்வினை நோய்குறித்து மாவட்ட தலைமை அலுவலர் மற்றும் அரம்ப சுகாதார துறை அலுவலர்களுடன் விழிப்புணர் நிகழ்ச்சியுடன், பொதுமக்களுடன் HIV நோய் தடுப்பு உறுதி மொழி செய்துகொண்டனர்.
விவசாய துறை சார்ந்த விவசாயிகளுக்கு பாரத பிரதமரின் கெளரவ நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை மற்றும் 50 சதவீதம் மானியத்துடன் விவசாய கடன்,ஒழுங்கு முறை விற்பனை நிலையம் மூலம் பொருளீட்டு கடன் நேரில் கொள்முதல் குறித்து விவசாய துறை அலுவலர்கள் விளக்கினர்.