ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் தேர் திருவிழா
விழா புதன்கிழமை அதிகாலை அம்மனுக்கு பால் பன்னீர் தேன் இளநீர் போன்ற 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து கொடியேற்று நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் ஒன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு அம்மன் மூர்சிக வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது வெள்ளிக்கிழமை ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது காலை 10 மணியளவில் திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சி நையாண்டி மேளம் கேரளா செண்டை மேளம் ராஜ மேலத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர் ஏராளமான சுற்று வட்டார பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசித்தனர் திருவிழா ஏற்பாடுகளை சொக்கநாதன் புத்தூர் இந்து நாடார் உறவின்முறை மகிமைப் பண்டு விழா கமிட்டியினர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்