பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் உள் ளிட்ட பணியாளர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன் னேற்ற சங்க மாவட்டசெயலாளர் வெற்றிவேல் தலை மையில் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெங்கடேச பெருமாளை சந்தித்து கோரிக்கை மனு அளித்த அந்த மனுவில் கூறியிருப் பதாவது:- ஒருங்கிணைத்த பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்கு மற்றும் தணிக்கைமேலாளர் கனக்குகள், கணக்காளர்கள். உன்ன கணினி வகைபடுதுனர்கள், கணினிபதிவாளர்கள்,அலுவலக உதவியாளர்கள், பகல்நேரா பாதுகாப்பு மையப் பணியாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் என 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்

இவர்களுடைய கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.இதனால் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் எனவே அவர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும்

முதலமைச்சர் சிறப்பு நிதியிலிருந்து 23 கோடி விடுவிக்க வேண்டும் மாநில அரசு தன் பங்களிப்புக்காக வழங்க வேண்டிய 40 சதவீத நிதியை விடுவிக்க வேண்டும் மத்திய அரசு 2024 -25 ஆம் ஆண்டில் முதல் தவணையாக வழங்க வேண்டிய 573 கோடியை விடுவிக்க வேண்டும்.1500 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்கிட வேண்டும் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

மனுவை பெற்றுக் கொண்ட முதன்மை கல்வி அலுவலர் உங்களது கோரிக்கைகள் அரசுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும் என உறுதி அளித்தது தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *