யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக183 வது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை ராஜீவ் நகர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு வரவேற்றார்.
ஆலோசகர் ராகேஷ் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக அங்கன்வாடி மைய ஆசிரியை நாகவள்ளி உதவியாளர் பாண்டி செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். மரங்களின் அவசியம், சுற்றுச்சூழல், உயரும் வெப்பநிலை ஆகியன குறித்து வார்டு உறுப்பினர் ராஜசேகர் சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்விற்கு தேவையான மகிழம், வேம்பு , மந்தாரை, புங்கை மரங்கள் மற்றும் வலைகளை கார்த்திகேயன் வழங்கினார். விழாவில் ஆலோசகர்கள் சிலம்பம் மாஸ்டர் பாண்டி, பரமேஸ்வரன், சமூக ஆர்வலர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரமேஷ், பிரசீத் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு
பெண்கள் மற்றும் குழந்தைகளால் மரங்கள் நடப்பட்டது. சமூக ஆர்வலர் அழகர்சாமி அனைவருக்கும் காலை உணவு வழங்கினார். நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவி பூஜா நன்றி கூறினார்.