தரங்கம்பாடி அருகே சமூக விரோத செயல்களின் கூடாரமாகிய சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பழைய கட்டிடம். விரைந்து இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்தது.
மிகவும் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தத நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் பயன்பாடு அன்று விடப்பட்ட பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுற்றிலும் செடி,கொடி, மரங்கள் என அடர்ந்த வளாகத்தில் பராமரிப்பின்றி கட்டிடம் உள்ளதால் அதனை சிலர் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.மாலை 6 மணிக்கு மேல் இப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கட்டிடத்தின் உள்ளே காலாவதியான மாத்திரைகள், மருந்துகள், பழுதடைந்த மருத்துவ உபகரணங்கள் குவிந்து கிடக்கிறது.
எனவே உடனடியாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பழைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.