தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், அக்- 09. தஞ்சாவூர் மேம்பாலம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக வளாகத்திற்கு அருகில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியாளர்கள் கணினி விவர பதிவாளர்கள், கணக்காளர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பணியாளர்களுக்கும் செப்டம்பர் 2024 மாதத்திற்கான ஊதியம் இன்று வரை பணியாளர்களுக்கு வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இரா.அசோக், குணசேகரன், சௌமியா நாராயணன், செந்தில்குமார், சுரேஷ், பாக்கியராஜ், வேம்பையன், ராமலிங்கம், பாட்ஷா, பெரியசாமி ஆகியோர் பணியாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிற செப்டம்பர் மாத ஊதியத்தினை உடனடியாக விடுவித்திடக்கோரி கண்டன பேருரை ஆற்றினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைத்து நிலை பணியாளர்களும் கலந்து கொண்டு ஆதரவளித்தனர்,