பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் நடைமு றைப்படுத்த வேண்டும், அர சுத் துறைகளில் சிறப்பு கால முறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண் டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படை யிலான பணியிடங் களை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும், அரசுத் துறைகளை தனியார் மயமாக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தர்ணாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நீதிராஜா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் எமிமாள் ஞான செல்வி, மூட்டா மாநிலத் தலைவர் செந்தாமரை கண்ணன், அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஆ.செல்வம் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்று நிறை உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் சந்திரபோஸ் நன்றி கூறினார்.