செய்தியாளர் ச. முருகவேலு
நெட்டப்பாக்கம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம் சார்பில் கோண்டூர் கூட்ரோட்டில் இ. எம். ஆர். திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே ராமதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்றிய கழக அவைத்தலைவர் கே. ஏழுமலை தலைமையில் நடந்த கூட்டத்தில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றி ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் சிவி சண்முகம் பேசும்பொழுது.. அதிமுக கட்சியில் மட்டுமே எளிய தொண்டனும் உயர் பதவிக்கு வர முடியும் உங்களுடைய கடுமையான உழைப்பு கட்சியில் மேல் மட்டத்திற்கு வருவதற்கு வழிவகுக்கும்.
தொடர்ந்து இந்த வானூர் தொகுதி அதிமுக கைவசம் இருப்பதற்கு காரணம் அடிமட்ட தொண்டரின் ஒத்துழைப்பு தான் உங்களுடைய உழைப்பு தான். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1.எதிர் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் மூன்றாம் தலைமுறையாம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து அயராது பாடுபட வேண்டும். 2.வரும் 17ஆம் தேதி கழகத்தின் 53 வது ஆண்டு துவக்க நாளான அன்று நமது ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களில் உள்ள கொடிக்கம்பங்களை புதுப்பித்து கழகக்கொடி ஏற்றி கழகக் கொள்கை விளக்க பாடல்களை ஒளிபரப்பி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும்.3. விழுப்புரம் நாகப்பட்டினம் சாலையில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணியானது
ஆமை வேகத்தில் நடைபெறுவதோடு கடந்த எட்டு மாத காலங்களாக அந்த சாலை மூடப்பட்டுள்ளதால் அந்த பகுதியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள் இதற்கு காரணமான மைனாரிட்டி மோடி அரசையும் அதற்கு துணை போகும் ஸ்டாலின் அரசையும் இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பூங்கா ராமமூர்த்தி. மாவட்ட கவுன்சிலர் நித்திய கல்யாணி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சந்திரசேகர், கிருஷ்ணாபுரம் ஒன்றிய கவுன்சிலர் அய்யனார், பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி வேலு, பாக்கம் முன்னால் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் மதியழகன், மிட்டா மண்டகப்பட்டு கிளைக் கழக செயலாளர் கே செல்வம்,
மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர் ஜெயராமன், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எம். எஸ். ஆர். முருகன், இணை செயலாளர் சுந்தர்ராஜ், மருதூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கலியபெருமாள், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய புரட்சித்தலைவி அம்மா பேரவை பொருளாளர் பற்குணன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பி. எஸ். வேலு, கோண்டூர் கிளைக் கழக செயலாளர் முனியசாமி, கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.எஸ்.சுகுமார், கோண்டூர் வார்டு உறுப்பினர் முரளி,
துலுக்க நத்தம் வார்டு உறுப்பினர் கருணாகரன், துலுக்க நத்தம் முன்னாள் கிளைக் கழக செயலாளர் சிவா, உட்பட திரளாக பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் மதிய உணவு விருந்து பரிமாறப்பட்டது