திருப்பத்தூர் நகராட்சி மற்றும் நகர பகுதியில் உள்ள இரண்டு மேல்” நீர்த்தேக்க தொட்டியை திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் விநியோகம் வழங்க வேண்டும் என கூறிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் 36 வார்டு களின் சரியான முறையில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்வதில்லை என பொதுமக்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பிக்கு புகார் அளித்துள்ளனர்

புகாரின் பேரில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இன்று காலை சக்திநகர் பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள சுமார் 2.5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல் நீர்தேக்க தொட்டி மற்றும் சப் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுமார் 11.35 லட்சம் கொள்ளளவு கொண்டு மேல் நீர்த்தேக்க தொட்டியை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளை அழைத்து பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணம் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அதனை விரைந்து சரி செய்து பொது மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் நாராயணன். சேர்மன் சங்கீதா வெங்கடேசன், துணை சேர்மன் சபியுல்லா, மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *