திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சமூக நல அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வந்தவாசி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை பொ.பத்மாவதி தலைமை தாங்கினார்.

சமூக நலத்துறை அலுவலர் சரண்யா முன்னிலை வகித்தார். சமூக நல விரிவாக்க அலுவலர் ஜீவா வரவேற்றார். ஆசியன் இன்சிடியூட் நிறுவனர் பீ. ரகமதுல்லா பங்கேற்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் கற்க கசடற கல்வி சேவைக் குழு நிறுவனர் டாக்டர் இரா. பாஸ்கரன் பெண் குழந்தைகளுக்கான கல்வியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் மனநல ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில் பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள், குழந்தை திருமண பாதுகாப்பு சட்டம், பெண்கள் பாதுகாப்புச் சட்டம் தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் 1098 எண்ணிற்கான விழிப்புணர்வு உள்ளிட்டவை விளக்கப்பட்டது. மகளிர் ஊர் நல அலுவலர் லதா நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.