கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் உரக்கச் சொல் செயலியை கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவ.செந்தில்குமார் அறிமுகம் செய்தார்.
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் மக்களின் நலம் கருதியும் குற்றங்களை தெரியப்படுத்தவும் “உரக்கச் சொல்” செயலியை அறிமுகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்
சிவசெந்தில்குமார் செயலியை அறிமுகம் செய்து மக்கள் இந்த செயலி மூலம் குற்றங்களை தெரியப்படுத்தவும் தடுக்கவும் என தெரிவிக்கலாம்.
இதில் காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.