கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல்கந்தசாமி தலைமையில் நகரச்செயலாளர் ம.மயில்கணேசன், ஏ.டி.பி.தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது ஆகியோர் முன்னிலையில் சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, வாடகை உயர்வு, உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுகளை திரும்பப் பெறவும் நகராட்சி டெண்டர் பணிகளை முறையாக வழங்கவும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழில் வரியை ரத்து செய்யவும் வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர கழக துணைச்செயலாளர் எஸ்.பொன்கணேசன், வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், மாவட்ட பாசறை இணைச்செயலாளர் அ.சலாவுதீன், அவைத்தலைவர் சுடர் பாலு, மாவட்ட பேரவை இணைச்செயலாளர் நரசப்பன், ஆடிட்டர் சண்முகவேல், ஐ.டி.விங்க் நகரச்செயலாளர் சண்முகம், வார்டு கழக செயலாளர்கள் எம்.ஆர்.எஸ்.மோகன்,எஸ்.கே.எஸ்.பாலு, நிர்வாகிகள் காய்கடை சசிகுமார், செந்தூர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்