நவராத்திரி கொலு விழா..புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாட்டப்படும் விதமாக…
திருவாரூர் மாவட்டம், குடவாசல் நன்னிலம் சாலையில், தலைமையாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி காந்திமதி தம்பதியினர் கடந்த 40 வருடங்களாக 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொம்மைகளை கொண்டு கொழு வைத்து வழிபட்டு வருகின்றனர்..

நவராத்திரி விழாவில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவது ஐதீகம்..
நவராத்திரி விழாவில் கொலு வைத்து வழிபாடு செய்வது பாரம்பரியமாக இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார்.
குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான்.
அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான்.“ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்.” என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல் களிலிருந்து விடுதலை பெற்றான்… என்பது புராணம்.எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழி பாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது.

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்து வதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப் படுகின்றன.
அவ்வாறாக கோவிந்தராஜ் மனைவி காந்திமதி சுமார் 20000 பொம்மைகளை கைகளாலேயே செய்து கொலுவில் வைத்துள்ளார்..

மேலும் 40000 -கும் மேற்பட்ட பொம்மைகளை மிக நேர்த்தியாக வீடு முழுதும் அடுக்கி வைத்து காட்சிப்படுத்தியுள்ளனர் இந்த தம்பதியினர்..

மேலும் காந்திமதி அம்மாள் சொல்லும் போது ‘எம்மதமும் சம்மதம் என்பது போல் இயேசு பிறப்பு, தாஜ்மஹால், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பொம்மைகளை வைத்துள்ளோம்.
ஒவ்வொரு நாளும் பலரும் வந்து கண்டு களித்து செல்கின்றனர்.. அது எங்களுக்கு மன அமைதி தருகிறது…’ எனக் கூறினார்..

பேட்டி:
1.கவிதா,
2.மோகனப்பிரியா (பாட்டு)
3.காந்திமதி,
4.கோவிந்தராஜ்
குடவாசல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *