விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் ஸ்ரீ பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் வைத்து ரோட்டரி கிளப் ஆப் ராஜபாளையம் சென்ட்ரல் சங்கம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. பள்ளித் தாளாளர் பழனியப்பன் தலைமையில் பேரணியை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர் ஆர். ரகுராமன் துவக்கி வைத்தார்.
ரோட்டரி கிளப் ஆப் ராஜபாளையம் சென்ட்ரல் தலைவர் பழனிச்சாமி, செயலாளர் பொன்னுச்சாமி, மற்றும் பள்ளி கமிட்டி உறுப்பினர் லட்சுமணன், உள்பட பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முக்கிய கிராமங்கள் வழியாக சென்று மீண்டும் பேரணி பள்ளிக்கூடத்தை வந்தடைந்தது. பள்ளியின் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.