திருப்பத்தூரில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக மீது முன்னாள் அமைச்சர்கள் கடும் விமர்சனம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் டாக்டர்.திருப்பதி தலைமையில் நடைப்பெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, மு.தம்பிதுரை, கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அதிமுக கட்சி மட்டும் தான் அனைத்து மக்களுக்கான கட்சி, திமுக வாரிசுகளுக்கான கட்சி.

எனவே வருகிற 2026ஆண்டு நடைப்பெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடியாரை முதல்வராக அமர வைக்க அனைவரும் பாடுப்பட வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளருமான கே.பி.அன்பழகன் பேசுகையில் திமுக ஆட்சி விளம்பர ஆட்சி தற்போது ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக தான் ஆட்சி நடத்தி மக்களுக்கான எந்தவொரு தொலைநோக்கு பார்வை இந்த ஆட்சியில் இல்லை என தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என தெரிந்து தான் எடப்பாடியார் ஆட்சியில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை,எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்தார்.

திமுக நீட் ஒழிப்பதாக பொய்யாக வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தனர் என தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை

திமுக ஆட்சியில் மக்களுக்கான தொலைநோக்கு பார்வை இல்லை,திமுக கட்சியில் தான் கலைஞர் , ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதி ஆகியோர் முதல்வர் ஆகுவது தான் திமுகவின் தொலைநோக்கு பார்வை என கடும் விமர்சனம் செய்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 50க்கும் மேற்ப்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *