தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பகே எல் எஸ் எஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் மாணவ மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள கருத்துக்களை பேசி சிறப்புரையாற்றினார்
இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார் தேனி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார் கம்பம் ஒன்றிய திமுக செயலாளர் பி தங்கபாண்டியன் புதுப்பட்டி பேரூர் செயலாளரும் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான எம் டி எம் பார்த்திபன் பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த விழாவில் நிலக்கிழார்கள் சிவாஜி மோகன் கே எல் எஸ் எஸ் கே ரவிச்சந்திரன் தொழிலதிபர் கே.எம்.பி.எல் ரவி திமுக பிரமுகர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதீபா ஈஸ்வரன் பாரிஸாம்பால் ஈஸ்வரன் முனியாண்டி ஏ ராசா சாமிக்கண்ணு ஆரோக்கியம்மாள் ராஜாங்கம் கோபாலகிருஷ்ணன்மற்றும் திமுக பிரமுகர் பஷீர் ஊர் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பள்ளியின் இரு பால் ஆசிரியர்கள் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம் டி எம் பார்த்திபன் நன்றி கூறினார்