திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சரஸ்வதி பூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் சரஸ்வதி பாடலை பாடி மகிழ்வித்தனர்.‌

பள்ளியின் தலைமை ஆசிரியர் என் . அனந்தராஜன் மாணவர்கள் கல்வியை திறம்பட கற்று ஒழுக்கத்தோடு விளங்க வேண்டும் என கூறினார். இந்நிகழ்வில் SMC தலைவர் வரலட்சுமி மற்றும் SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *