திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மட்டவெட்டு கல்லாறு ஆற்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்
ஆற்றை கடக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரின் மகன் சந்தோஷ் குமார் (எ)தலையாட்டி (30) நீரில் அடித்துச் சென்று மாயமானார்
இதனைத் தொடர்ந்து புதுப்பாளையம் காவல்துறையினரின் புகாரின் அடிப்படையில் செங்கம் தீயணைப்புத்துறை வீரர்கள் நீரில் அடித்துச் சென்ற சந்தோஷ் குமாரை சுமார் இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில்
சந்தோஷ் குமார் உயிரிழந்து அவரது உடல் முட்ப்புதரில் இருந்து செங்கம் தீயணைப்புத்துறை விரர்கள் மீட்டனர்
ஆற்றைக் கடந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது